சாக்கடை அடைப்பை எடுத்து விடுங்கப்பா.. சொல்கிறார் நயனதாரா

|

Nayanthara Wants Clean Rain Water Canals In Chennai   

நயனதாராவுக்கு வர வர சமூக பார்வை அதிகமாகிக் கொண்டு போகிறது போலும். சாக்கடை அடைப்பையெல்லாம் எடுத்து விடுமாறு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்.

ஒரு காலத்தில் ஓஹோவென திரையுலகில் வலம் வந்தவர் நயனதாரா. அவருடன் ஜோடி போட ஒரே கூட்டமாக இருந்த காலம் அது. இடையில் இரண்டு முறை காதலில் விழுந்தார் நயனதாரா. இரண்டுமே பாதியிலேயே புட்டுக் கொண்டது. அந்த இரண்டு தோல்விக்கும் என்ன காரணம் என்பது இதுவரை சரியாக தெரிவிக்கப்படவில்லை, அது அவர்களது பெர்சனல் மேட்டர். நமக்கேன் வம்பு.

இப்போது மேட்டருக்கு வருவோம். சென்னை நகரம் குறித்த தனது கருத்துக்களைக் கூறியுள்ள நயனதாரா சென்னை நகரின் அலங்கோலங்களையும் கோடிடடுக் காட்டி அதையெல்லாம் சரி செய்யுமாறு கோரிக்கையும் வைத்துள்ளார். குறிப்பாக சாக்கடை அடைப்புதான் அவரை ரொம்பவே கடுப்பாக்குகிறதாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மழைக்காலத்தில் சென்னையில் நடக்கவே முடியாது. சாலைகள் எல்லாம் ரொம்ப மோசம். அதை விட இந்த சாக்கடை கால்வாய் அடைப்புகள்தான் பெரும் சிரமப்படுத்தும். அதையெல்லாம் சரி செய்து, அடைப்புகளை எடுத்து விட்டால், ரோடுகளில் தண்ணீர் நிற்க வாய்ப்பே இல்லை. மழைக்காலத்தில் மக்களும் நிம்மதியாக செல்ல முடியும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

அட, நம்ம அரசியல்வாதிகளுக்குக் கூட இந்த அடைப்பெடுக்கும் யோசனை தோன்றாமல் போய் விட்டதேய்யா...!!

 

Post a Comment