ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் `லிட்டில் மாஸ்டர்ஸ்' நடன நிகழ்ச்சி, சீசன் நான்கு ஒளிபரப்பாக உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குட்டி நடன கலைஞர்கள் அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகின்றனர்.
லிட்டில் மாஸ்டர்ஸ் சீசன் 4 நடன நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து திறமையான குட்டி கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான அடுத்த சுற்று போட்டி தயாராகிவிட்டது. இந்த நிகழ்ச்சியை பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகர்கள் ராகவ், பிருத்விராஜ் ஆகியோருடன் பிரபல நடன இயக்குநர் ஜானியும் இணைந்து லிட்டில் மாஸ்டரை தேர்ந்தெடுக்கிறார். இந்த சுற்றில் `டாப் 40 குட்டி நடனப் புயல்கள்` நிகழ்ச்சியின் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். லிட்டில் மாஸ்டர் சீசன் 4 ஐ வெள்ளி மற்றும் சனி இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில் காணலாம்.
முதன்முறையாக குருகுலம் முறையை பயன்படுத்திய நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் இன்று சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் கால்பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment