எனக்கு அழகான ஜோடி கிடைத்திருக்கிறது : கருணாஸ்

|

Karunas Produces Acts Ragalaipuram   

ரியல் லைப்பிலும் சரி, ரீல் லைப்பிலும் எனக்கு அழகான ஜோடிகளே கிடைக்கின்றனர் என்று திரைப்பட நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் சிறப்பு நிகழ்ச்சியில் கருணாஸ் தயாரித்து நடிக்கும் ரகளைபுரம் படத்தின் சிறப்பு கண்ணோட்டம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை கிரேஸ் கருணாஸ் தொகுத்து வழங்கினார். சூட்டிங் ஸ்பாட், இசை ஒலிப்பதிவு கூடம் என ஒவ்வொரு இடமாக சென்று நிகழ்ச்சியை ஒளிபரப்பியது ரகளையாக இருந்தது.

காமெடியனோ, கதாநாயகனோ இனிமேல் தனக்கான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க இருப்பதாக தெரிவித்தார் கருணாஸ். கணவர் என்றும் பாராமல் கிண்டலும், கேலியுமாக கிரேஸ் கேட்ட கேள்விகளுக்கு கொஞ்சம் சீரியசாகவே பதில் சொன்னார் கருணா. என்னுடன் நடித்த கதாநாயகிகள் எல்லோருமே அழகான கதாநாயாகிகள். என் மனைவி கிரேஸ் உட்பட என்று கருணாஸ் கூறியதும் முகம் கொள்ளாத சிரிப்போடு வெட்கத்தில் சிவந்து போனார் கிரேஸ்.

கருணாஸ் உடன் ரகளைபுரம் படத்தில் நடித்த நடிகர்கள் கோவைசரளா, சிங்கம்புலி, ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ரகளைபுரம் படத்தில் கருணாஸ் - கிரேஸ் தம்பதியரின் மகன் நடனமாடியுள்ளதோடு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய காமெடி படமாக இருக்கும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்தார் படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான கருணாஸ்.

 

Post a Comment