மனதிற்கு நிறைவு தரும் நிகழ்ச்சி தொகுப்பு: ஷில்பா

|

Namma Veetu Kalyanam Shilpa
விஜய் டிவியில் நம்ம வீட்டுக் கல்யணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஷில்பா விற்கு சீரியல் வாய்ப்பு வந்தாலும் அதில் நடிக்க விருப்பமில்லையாம். ஏனெனில் தனக்கு நடிக்கத் தெரியாது என்று ஓபனாக ஒத்துக்கொண்டுள்ளார்.

திரை உலக நட்சத்திரங்கள், பிரபலங்களின் திருமணத்தை தொகுத்து வழங்கும் ஷில்பா. திருமண நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காகவே அரசியல், சினிமா, விளையாட்டு என பலவற்றை கற்றுக்கொண்டிருக்கிறார். நட்சத்திர அந்தஸ்தில் உள்ளவர்கள் தங்கள் திருமணத்தை பற்றி சுவாரஸ்யமாக பேசும் போது இரு வீட்டாருக்கும் தெரியாத பல கதைகளை சுவாரஸ்யமாக தெரிவிக்கிறார்.

கேரளாவில் பிறந்தாலும் தமிழ் கலாச்சாரமுறைப்படியில் திருமணம் செய்து கொண்டார் ஷில்பா. இவரது கணவர் பரத் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவராம். நான்கு வருடங்கள் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடித்துள்ளனர்.

நம்ம வீட்டுக் கல்யாணம் விஜய் டிவியில் 150 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த மார்ச் 25 ம் தேதி ஷில்பாவின் திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தன்னுடைய திருமண நிகழ்ச்சியை தானே தொகுத்து வழங்கியது தனக்கு பெருமை தரக்கூடியது என்கிறார் ஷில்பா.

ஷில்பா ஒரு தீவிர இந்துஸ்தானி இசைப் பிரியர். அதற்காக தற்போது முழுக்க முழுக்க ஹிந்துஸ்தானி இசை பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். கன்னடப் படம் ஒன்றில், ஒரு பாடலும் பாடியிருக்கிறார் ஷில்பா. விரைவில் தமிழிலும் பாடுவதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறார்.
 

Post a Comment