தேசிய கொடியை அவமதித்ததாக ஷாருக்கான் மீது வழக்கு

|

Case Against Shah Rukh Khan Disrespection

மும்பை: தேசியக் கொடியை அவமதித்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற பிறகு நடந்த கொண்டாடட்டத்தின்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தேசிய கொடியை அவமதித்ததாக சமூக சேவகர் ரவிந்திர பிரம்மே (40) என்பவர் சாட்டுஷ்ரிங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக தேசியக்கொடியை பிகினி போன்று அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த மாடல் கெஹ்னா வசிஷ்ட்டுக்கு எதிராக ரவிந்திரா டெக்கன் ஜிம்கானா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கெஹ்னாவை கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்தனர்.

இந்நிலையில் ரவிந்திரா கூறுகையில்,

தேசிய கொடியை அவமதிப்பவர்களை கண்டுபிடித்து அவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது புகார் கொடுக்க ஒரு இயக்கத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம். அண்மையில் நான் பிரவுஸ் செய்தபோது 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற பிறகு நடந்த கொண்டாடட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்களைப் பார்த்தேன். அப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நம் தேசிய கொடியை அசைப்பது போன்ற படத்தை பார்த்தேன். அவர் தேசிய கொடியை தலைகீழாகப் பிடித்து அதை அவமதித்துவிட்டார்.

ஷாருக்கான் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடல். அப்படிபட்டவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அவர் தேசியக் கொடியை அவமதித்தது குறித்து நான் சாட்டுஷ்ரிங் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். எனது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வழக்கை ஷாருக்கான் வசிக்கும் மும்பை பந்த்ரா பகுதி காவல் நிலையத்திற்கு மாற்றினர் என்றார்.

 

Post a Comment