நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்... - மீண்டும் புயல் கிளப்பும் சனா கான்

|

Sana Khan Firm On Her Comment About   

சென்னை: தென்னிந்திய நடிகைகளும்தான் தம்மடிக்கிறாங்க, குடிக்கிறாங்க... ஆனா வெளில தெரியறதில்லை, என்று சமீபத்தில் கூறி சர்ச்சையைக் கிளப்பியவர் நடிகை சனா கான்.

இப்போதும் தன் கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், இல்லாத ஒன்றை தான் சொல்லவில்லை என்றும் அவர் மீண்டும் கூறியுள்ளார்.

சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு உள்ளிட்ட படங்களில் நடித்த சனாகான் சமீபத்தில் சென்னையில் அளித்த பேட்டியில், "இந்தி நடிகைகளைவிட தென்இந்திய நடிகைகள் மது, சிகரெட் பழக்கத்துக்கு அதிகமாக அடிமையாகி உள்ளனர்... ஆனால் அது வெளியில் தெரிவதில்லை. மும்பை நட்சத்திர ஓட்டல்களில் பாலிவுட் நடிகைகள் மட்டுமல்ல, தென் இந்திய நடிகைகளும் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு தள்ளாடிப் போவதை பார்த்து இருக்கிறேன். எனக்கு அதுபோன்ற பழக்கம் எதுவும் கிடையாது," என்று பரபரப்பு பேட்டியளித்தார்.

இதற்கு நடிகைகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்டோர் சனாகானை கண்டித்து பேட்டி அளித்தனர். எச்சரிக்கையும் விடுத்தார்கள்.

ஆனால் இதற்காக சனா கான் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் இதுகுறித்து கூறுகையில், "நான் தவறாக எதையும் பேசிவிடவில்லை. இல்லாத ஒன்றையா நான் சொன்னேன்....

மது, புகை பழக்கம் உள்ள நடிகைகள் பற்றிய உண்மையைதான் சொன்னேன். இன்றும் நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் மது கிளாசை கையில் வைத்திருப்பது போன்ற படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த பழக்கத்தை அவர்கள் விடட்டும். மாறாக என் மீது பாய்வதில் என்ன நியாயம்? ஒரு உண்மையைச் சொன்னேன். அதற்காக என்னைத் திட்டுவது முறையல்ல," என்றார்.

 

Post a Comment