சூதாட்ட கப்பலில் ப்ரியாமணிக்கு மட்டும் அனுமதி!

|

Priyamani Visits Casino Pride Goa   

கோவா: கோவாவின் மாண்டோவி ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ள பிரபல சூதாட்ட கப்பலான காஸினோ பிரைடில், நடிகை பிரியாமணிக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பொதுவாக கேஸினோக்கள் எனப்படும் சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதியில்லை.

எனவே கோவா அரசு, சுற்றுலா என்ற பெயரில் சூதாட்டத்தை நிலத்தில் அனுமதிக்காமல், நீரில் மிதக்கும் கப்பல்களில் அனுமதிக்கிறது. மாண்டோவி ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ள பிரமாண்ட கப்பலான கேஸினோ பிரைட், ஒரு பெரிய சூதாட்ட விடுதி எனலாம்.

பொதுவாக இந்தக் கப்பலில் சினிமா படப்பிடிப்பு போன்றவற்றை அனுமதிப்பதில்லையாம். ஆனால் பிரியாமணிக்காக அனுமதித்தார்களாம்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் ஜோடியாக ப்ரியாமணி நடிக்கும் லட்சுமி எனும் படத்தின் ஷூட்டிங் இந்த சூதாட்டக் கப்பலில் வைத்து எடுக்கப்பட்டது. கப்பலின் அழகிய உள் அலங்கார வேலைப்பாடுகளையும் படமாக்கிக் கொண்டார்களாம்.

இந்தக் கப்பலில் நடந்த படப்பிடிப்பு ரொம்ப உற்சாகமாகவும் புதுமையாகவும் இருந்ததாக ப்ரியாமணி தெரிவித்தார்.

 

Post a Comment