இளையராஜாவுடன் பணியாற்றியவர்கள், அவரை விட்டுப் பிரிந்ததும் செய்யும் முதல் வேலை, வைரமுத்துவை அழைத்து வாய்ப்பு தருவதுதான்.
இந்த லிஸ்டில் இப்போது இணைந்திருப்பவர் பாலா.
தனது பரதேசி படத்துக்கு பாட்டெழுத வைரமுத்துவை அழைத்துள்ளார் பாலா.
பாலா என்ற இளைஞர், வாய்ப்பு மறுக்கப்பட்டு அல்லது தொடங்கிய படம் பாதியில் நின்று தவித்த காலத்தில் அவரை உறுதுணையாக இருந்து, படைப்பாளியாக நிமிர வைத்தவர்கள் இருவர். ஒருவர் சிவகுமார். இன்னொருவர் இசைஞானி இளையராஜா.
சேது தொடங்கி, அவன் இவன் வரை பாலாவின் படங்களுக்கு இளையராஜா அல்லது யுவன் மட்டும்தான் இசையமைத்து வந்தனர். சூர்யாவும் தொடர்ந்து பாலா படங்களில் தோன்றி வந்தார்.
இப்போது பரதேசி படத்துக்காக முதல் முறையாக ஜீவி பிரகாஷ் குமாருடன் கைகோர்த்துள்ளார் பாலா. அடுத்ததாக, வைரமுத்துவை அழைத்து பாடல் எழுதுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் சினிமா ஒரு வட்டம்தான்!!
Post a Comment