இசை ரசிகர்கள் ஆனந்தப் பரவசத்திலிருக்கிறார்கள். நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இன்னுமொரு பாடலின் ஆடியோ - வீடியோ முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர் சோனி நிறுவனம் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன்.
எடுத்த எடுப்பிலேயே ராஜாவின் அந்த மேஜிக் மனசைச் சுண்டி இழுத்து பாடலுக்குள் வீழ்த்திவிடுகிறது, எழ முடியாத அளவுக்கு. ஒரு முறை கேட்ட பிறகு திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்ட இருப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை.
'பாட்டுன்னா இது பாட்டு... இதான் பாட்டு' என்று சொல்லுமளவுக்கு அசத்தல் இசை. அற்புதமான வரிகள்.
"என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்... உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்!" என பாடல் தொடங்க, உடன் மெல்லிய தென்றலாய் பயணிக்கிறது ராஜாவின் இசை.
இதற்காகத்தான் இத்தனை நாட்களாய் காத்திருந்தார்கள் நல்ல இசை விரும்பும் ரசிகர்கள்.
ஏற்கெனவே யுவன் குரலில் வெளியான 'சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போதும்...' பாடல் காதலர்களின் உதடுகளில் தவழ்ந்து கொண்டிருக்க, இப்போது இந்தப் பாடல் வந்திருக்கிறது.
இதைக் கேட்ட பிறகு, எப்போது வரும் செப்டம்பர் 1 என காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர். அன்றுதானே இசை வசந்தம்... அதுவும் ராஜாவின் நேரடி கச்சேரியுடன் ஆரம்பிக்கிறது!!
Post a Comment