காமெடி நடிகர் கஞ்சா கருப்பு மதுரை அருகே இலவச மருத்துவமனை கட்டுகிறாராம். ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு. சில மாதங்களுக்கு முன் திருச்சிக்கு அருகே உள்ள மணப்பாறையில் சாந்திவனம் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு நிதிதிரட்டிக் கொடுத்த கஞ்சா கருப்பு, 13 குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார், தன் மனைவியுடன் இணைந்து.
இன்னொரு பக்கம், மதுரைக்கு அருகே மதகுப்பட்டியில், ஒரு மருத்துவமனையைக் கட்டி வருகிறார் கஞ்சா கருப்பு. இங்கு ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தவிர, திரைத்துறையில் முன்பு முக்கிய நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்து, இப்போது வேலையில்லாமல் இருக்கும் பல துணை நடிகர்களையும் தான் நடிக்கும் படங்களில் சிபாரிசு செய்கிறாராம் கருப்பு.
என்னமோ கருப்பு... இதெல்லாம் வெறும் விளம்பரமா இல்லாம இருந்தா சரிதான்!
Post a Comment