மாற்றான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அத்தனை நாயகிகளும் ஆஜர்!

|

Surya S Heroines Attend Maatran

சென்னை: நடிகர் சூர்யாவின் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இதுவரை அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த அனைத்து நாயகிகளும் கலந்து கொள்கின்றனர்.

அயன் படத்துக்குப் பிறகு கே.வி. ஆனந்த் - சூர்யா இணைந்துள்ள படம் மாற்றான். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளதால் மாற்றான் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாற்றான் பட பாடல் வெளியீட்டு விழா வருகிற 9-ந் தேதி சிங்கப்பூரில் நடக்கிறது. மிக பிரமாண்ட நிகழ்ச்சாயாக திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நடிகர், நடிகைகள் நடனம் ஆடுகிறார்கள். இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

எனவே விழாவில் பங்கேற்கும்படி இதுவரை சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளை கே.வி.ஆனந்த் அழைத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று சூர்யா மனைவி ஜோதிகா மற்றும் நயன்தாரா, திரிஷா, அசின், ஸ்ருதிஹாசன், தமன்னா, திவ்யா ஸ்பந்தனா, சமீரா ரெட்டி ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர். மாற்றான் படத்தில் ஜோடியாக நடிக்கும் காஜர் அகர்வாலும் கலந்து கொள்கிறார். சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தியும் இதில் கலந்து கொள்கிறார்.

அனைவரும் மேடையில் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளனர். இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் லைவாக இசை கச்சேரியை நடத்துகிறார்.

முன்னணியில் உள்ள பாடகர்கள் பலரும் இதில் பங்கேற்று பாடுகிறார்கள்.

 

Post a Comment