படம் பூராவும் 'பலான சீன்'... இந்தப் படத்துக்கு அனுமதி கொடுத்த சென்சார்!

|

படத்தில் வன்முறை அதிகமாக இருக்கிறது, ஆபாசம் இருக்கிறது என்று கூறி பல படங்களுக்கு சர்டிபிகேட் தராமல் சென்சார் போர்டு கேட் போட்டு வரும் நிலையில், ஆபாசக் காட்சிகள் ஏகத்துக்கும் நிரம்பிய ஒரு படத்துக்கு அனுமதி அளித்துள்ளது சென்சார் போர்டு.

கள்ளப் பருந்து என்பது இப்படத்தின் பெயர். இதயன் என்பவர் டைரக்ட் செய்துள்ளார். புதுமுகங்கள் நிறையப் பேர் நடித்துள்ளனர்.

kallaparunthu gets certificate from censor tribunal
Close
 

இந்தப் படத்தின் கதையே விகாரமானது. அதாவது ஒரு பணக்காரருக்கு மனைவி, 3 மகள்கள். இவர்களை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறார் அந்த கோடீஸ்வரன். இந்த நிலையில் வீட்டுக்கு புதிதாக வேலைக்கு வருகிறார் ஒரு டிரைவர். வீட்டின் சூழலை புரிந்து கொண்ட அவர் வீட்டில் உள்ள பெண்களை தனது வலையில் வீழ்த்தி ஒவ்வொருவராக பிராக்கெட் போட்டு காம இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்.

இந்த காம லீலைகள் ரொம்ப நாளைக்குப் பிறகுதான் கோடீஸ்வரருக்குத் தெரிய வருகிறதாம். இதையடுத்து ஐவரையும் கொலை செய்யும் கோடீஸ்வரர், தானும் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகிறாராம்.

இப்படிப்பட்ட அபாரமான கதைக் கருவுடன் கூடிய இப்படத்தில், ஏகப்பட்ட பலான சீன்களாம். இந்தப் படத்தை பார்த்த சென்னை சென்சார் போர்டு அதிகாரிகள், கண் கூசிப் போய் சீச்சீ இதெல்லாம் ஒரு படமா என்று தூக்கிப் போட்டு விட்டனர்.

இதையடுத்து ரிவைசரி கமிட்டியிடம் போனது படத் தயாரிப்புக் குழு. அங்கும் ரிஜக்ட் ஆகி விட்டது படம். இதையடுத்து டெல்லி டிரிப்யூனலில் முறையிட்டுள்ளனர். அவர்கள் படத்தைப் பார்த்து சில பல சீன்களை வெட்டி விட்டு ஏ சான்றிதழ் கொடுத்து திரையிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டனராம். அத்தோடு நில்லாமல் இது சமூகத்திற்குத் தேவையான கதை என்றும் பாராட்டிவிட்டார்களாம்.

என்ன கொடுமை சார் இது என்று சொல்வது பழைய ஸ்டைல் என்பதால் அதை இந்த ஸ்டோரிக்குச் சொல்லவில்லை...!

 

Post a Comment