விருந்தில் நடந்த விஷயங்களை வெளியில் சொல்ல முடியுமா? - தமன்னா

|

Tamanna Refuses Reveal Her Party Secrets With Dhanush   

சென்னை: சமீபத்தில் நடந்த தனுஷின் பிறந்த நாள் விழாவில் செம குஜாலாக ஆட்டம் போட்டவர் நடிகை தமன்னா.

தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் மட்டுமல்ல, தனுஷுக்கும் தமன்னாவுக்கும் கூட கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸெல்லாம் ஏகத்துக்கும் ஒர்க் அவுட் ஆனதால், இருவரும் தங்கள் நட்பை ‘மெட்ராஸ் சிமெண்ட்’ போடாத குறையாக இறுக்கமாக்கிக் கொண்டுள்ளார்களாம்.

அந்த உறவின் உரிமையில், ஐஸ்வர்யாவை விட ஒரு படி அதிகமாகப் போய் பார்ட்டியில் அன்பைப் பொழிந்தாராம் அம்மணி.

இருவரும் அடிக்கடி காதருகில் கிசுகிசுப்பாக தெலுங்கில்தான் மாட்லாடிக் கொண்டார்களாம்.

அப்படி என்னதான் பேசினீர்கள்… தனுஷ் அப்படியென்ன ஸ்பெஷல் என்று சிலர் கேட்டதற்கு தமன்னா கூறிய பதில் இது:

தனுஷ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரொம்ப சுதந்திரமாக உணர்ந்தேன். மறக்கமுடியாத விருந்து அது.

‘வேங்கை’ படத்தில் இருந்து நானும் தனுஷும் நெருக்கமான நண்பர்கள் (அதைச் சொல்லணுமா!)

தனுஷ் அற்புதமான சிறந்த மனிதர். எந்த வேலையாக இருந்தாலும், அதை மீறி கலந்து கொள்வேன். அவர் பிறந்த நாளில் என்னால் பங்கேற்காமல் இருக்க முடியாது. இருவரும் நிறைய விஷயங்கள் பற்றி பேசினோம். ரொம்ப உணர்வுப் பூர்வமான நிகழ்வுகள் அவை. விருந்தில் நடந்த விஷயங்கள் பற்றி சொல்ல முடியுமா?,” என்றார்.

பார்றா… உடம்பெல்லாம் மச்சம்ங்கிறது இதானா?!

 

Post a Comment