சென்னை: நடிகை சுஜிபாலாவை மணக்க புதிய இயக்குநர் ரவிக்குமார் சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே திட்டமிட்டபடி திருச்செந்தூர் கோயிலில் திருமணம் நடக்கிறது.
நடிகை சுஜிபாலாவுக்கும், இயக்குனர் ரவிக்குமாருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. திருச்செந்தூர் கோவிலில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் திருமணத்துக்கு முந்தைய நாள் சுஜிபாலா திடீரென அதிகமான தூக்க மாத்திரைகள் தின்று மயங்கி விழுந்தார்.
அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. திருமணம் பிடிக்காமல்தான் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.
இன்னும் சிலர் சுஜிபாலாவை மணக்க இயக்குனர் ரவிக்குமார் மறுத்து விட்டதால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார் என்று கூறினார்.
அதற்கு வலு சேர்ப்பது போல மருத்துவமனையில் இருந்த சுஜிபாலாவை ரவிக்குமார் நேரில் போய் உடல் நலம் கூட விசாரிக்கவில்லை.
இருமாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்த போதும் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் சுஜிபாலா சிகிச்சை முடிந்து நிருபர்களைச் சந்தித்தார்.
தான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும், தெரியாமல் மாத்திரைகளை சாப்பிட்டதால் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறினார்.
"டைரக்டர் ரவிக்குமாருக்கும் எனக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. எங்கள் திருமணம் அக்டோபரில் நடக்கும். திருமணத்துக்குப்பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன்", என்றும் சுஜிபாலா கூறினார்.
இதற்கிடையே,சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்ள இயக்குனர் ரவிக்குமார் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். தனக்காக தூக்க மாத்திரை சாப்பிடும் அளவுக்குப் போன சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்ள முழு சம்மதம் என்று அவர் கூறியுள்ளாராம்.
Post a Comment