மும்பை: வரும் அக்டோபர் மாதம் சயீப் அலிகான் - கரீனா கபூர் திருமணம் கண்டிப்பாக நடக்கும் என சயீப்பின் தாயார் ஷர்மிளா தாகூர் தெரிவித்தார்.
கரீனா கபூரும், சயீப் அலிகானும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் அக்டோபர் 16-ந்தேதி திருமணம் நடக்கலாம் என தகவல் பரவியது. ஆனால் சயீப் அலிகான் இதனை மறுத்தார். தேதி இன்னும் முடிவாகவில்லை என்றார்.
தற்போது சயீப் அலிகானின் தாயாரும், முன்னாள் நடிகையுமான ஷர்மிளா தாகூர் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
அக்டோபர் மாதம் கரீனா கபூர் - சயீப்அலிகான் திருமணம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். ஆனால் தேதியை உறுதியாகக் கூறவில்லை. இதுபற்றிய தகவலை சயீப்பே அறிவிப்பார் என்றார் ஷர்மிளா.
இந்தத் திருமணம் டெல்லி அல்லது மும்பையில்தான் நடக்கும் என்றும், தங்களின் சொந்த ஊர் படோடியில் நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
சயீப் அலிகான் பட்டோடி சமஸ்தானத்தின் நவாபாக உள்ளார். பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதி. வக்பு வாரிய சொத்துக்களுக்கும் காப்பாளர் அவரே.
Post a Comment