'நமக்கு சீரியல்.... அவனுக்கு மட்டும் சில்வர் ஸ்கிரீனா?'

|

இந்த கிசுகிசுவுக்கு க்ளூவே கிடையாதுங்க. தயவு செஞ்சு நேர்ல கூட கேட்டுடாதீங்க… பழமொழி சொன்னா அனுபவிக்கணும்ங்கிற நம்ம கமல் ஸ்டைல்ல சொல்றேன்… படிச்சிட்டு மண்டைய குழப்பிங்கங்க!

அவர் ஒரு இளம் நடிகை. ஆரம்பப் படம் சொதப்பல். அடுத்தது தற்கொலைப் படம். படம் சுமாரான சொதப்பல். ‘இருந்தாலும் நல்லா நடிச்சுதே… கண்ணு சும்மா பேசுதே’ என்று பாராட்டித் தள்ளினார்கள் படம் பார்த்தவர்கள். பத்திரிகையாளர்கள் பார்வை ரொம்பவே அவர் பக்கம் பாய்ந்தது.

திடீரென்று நடிகையைப் பற்றி எங்கும் செய்தி. சிவப்பு சிவப்பாய் உடைகள் அணிந்து அலைபாயும் கூந்தலோடு பளீர் புன்னகையில் ஜொலித்தார் நடிகை.

ஒரு நாள் திடீரென்று எல்லாம் நின்றுபோனது. நடிகையைப் பற்றிய கிசுகிசு ‘தெரியுமா சேதி’ என நிருபர்கள் மத்தியில் பரவினாலும், அது பேனா முனை வரை வரவே இல்லை.

விசாரித்தால் நடிகையைச் சுற்றியிருக்கும் அன்புப் பிடி அப்படி ஒரு பவர்புல் பிடியாம்!

செல்வாக்கு மிக்க அந்த ‘பலதொழில்’ அதிபர், நகரின் பிரதான ஏரியாவில் தனியாக ஒரு வீட்டையே நடிகையின் கண்ணழகுக்கு எழுதி வைத்துவிட்டாராம். ‘நடிப்புக்கு மெல்ல மெல்ல குட்பை சொல்…, உடனே சொன்னா சந்தேகப்படுவானுங்க’ என்று உத்தரவாம்.

விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட இன்னொரு தொழில் அதிபருக்கு செம காட்டமாம். ‘நாம இவ்ளோ பெரிய பாரம்பரியமிக்க அதிபரா இருக்கோம்… நமக்கு டிவி சீரியல் ரேஞ்சுக்குதான் மாட்டுது.. அவனுக்கு மட்டும் சில்வர் ஸ்கிரீன் எப்படிய்யா சிக்கிச்சு. உடனே போடுறோம் அடுத்த பட பூஜையை..’, என புலம்புகிறாராம்!

திரும்பவும் சொல்றேன்… சில ‘காஸிப்’களை அனுபவிக்கணும்.. ஆராயக்கூடாது!!

 

Post a Comment