சூரியன் ரீமேக்கில் விஷால் – வரலட்சுமி ஜோடி ?

|

Vishal Suriyan Remake

சரத்குமார் நடித்த சூரியன் படம் ரீமேக் ஆகிறது. அதில் விஷால் - வரலட்சுமி ஜோடி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் பவித்ரன் இயக்கிய படம் சூரியன். 1992ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சரத்குமார் - ரோஜா நடித்திருந்தனர். இந்தப் படத்தில்தான் முதன் முதலாக பிரபுதேவா ஒரு நடன கலைஞராக அறிமுகமாயிருந்தார். சரத்குமாரின் வெள்ளி விழா படங்களில் இதுவும் ஒன்று.

இதனை தற்போது ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் இயக்குனர் பவித்ரன். இன்றைய சூழ்நிலைக்கேற்ப கதையில் சில மாற்றங்கள் செய்து பிரமாண்டமாக தயாரிக்க பவித்ரன் முடிவு செய்துள்ளார் பவித்ரன்.

தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் செய்து கொள்ள தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனிடம் அனுமதி பெற்றுவிட்டாராம். தமிழில் சரத்குமார் நடித்த கேரக்டரில் விஷாலும், ரோஜா கேரக்டரில் சரத்குமார் மகள் வரலட்சுமியையும் நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. இந்தியில் சாருக்கான் அல்லது சல்மான்கான் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

Post a Comment