மறுபடியும் வீ்ணாவுக்கு கிரிக்கெட் காய்ச்சல் வந்துருச்சாம்!

|

Veena Malik Back With Cricket Fever

பாகிஸ்தான் அழகி வீணா மாலிக்குக்கு மறுபடியும் கிரிக்கெட் ஜூரம் பிடித்து ஆட்டத் தொடங்கியுள்ளதாம். இதனால், அவர் இந்தியா டிவியில் கிரிக்கெட் வர்னணையாளராக புது அவதாரமும் எடுத்துள்ளாராம்.

கிடைக்கிற கேப்பில் கில்லி ஆடுவது என்பதை வீணா மாலிக்கைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். எப்படியெல்லாம் செய்தால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதைப் புரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்க கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டிக் கலக்கிக் கொண்டிருக்கிறார் வீணா.

இந்த நிலையில் இந்தியா, இலங்கை இடையிலான டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியின் வர்னணையாளராக மாறியிருக்கிறார் வீணா. இந்தியா டிவியில் அவர் முன்னாள் வீரர்களான சேத்தன் சர்மா, யோகராஜ் சிங், யஷ்பால் சர்மா, சஞ்சய் பரத்வாஜ், ராஜ்குமார் சர்மா ஆகியோருடன் இணைந்து கிரிக்கெட் கமெண்டரி கொடுக்கப் போகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு கிரிக்கெட் என்றால் உயிர். அதை தொடர்ந்து பார்த்து வருகிறேன். இப்போது என் கையில் நிறையப் படங்கள் இருக்கின்றன. இருப்பினும் கிரிக்கெட் மீது கொண்ட காதலால் இந்தியா டிவியில் நான் நிகழ்ச்சி வர்னணையாளராக மாற ஒப்புக் கொண்டுள்ளேன் என்றார்.

கிரிக்கெட் போட்டி குறித்தும், வீரர்களின் ஆட்டம் குறித்தும் நிபுணர்களுடன் சேர்ந்து கருத்துக்களை அள்ளிக் கொட்டப் போகிறாராம் வீணா.

 

Post a Comment