'கும்பலாக' வீடு கட்டக் களத்தில் குதிக்கும் சந்தானம்!

|

Santhanam Build Rented Apartments

காற்றுள்ளபோதே தூற்றிக்கோ... இந்தப் பழமொழி யாருக்குப் பொருத்தமாக இருக்கிறதோ, சினிமாக்காரர்களுக்குத்தான் செம பொருத்தம். மிகச் சரியாக இதைப் பயன்படுத்தி மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே வரும்படியும், முதலீடுகளிலும் படு கவனமாக இருப்பார்கள்.

திரையுலகில் முன்னணியில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக முதலீடுகளில் அக்கறை காட்டுவார்கள். அதில் ரியல் எஸ்டேட்டும் ஒன்று.

முன்பு கவுண்டமணி உச்சத்தில் இருந்தபோது ஏகப்பட்ட வீடுகளைக் கட்டினார். அதேபோல செந்திலும் போட்டி போட்டுக் கொண்டு வீடுகளைக் கட்டிக் குவித்தார். இவற்றை வாடகைக்கு விட்டனர். இன்று வரை வாடகை வருமானமே பெரிய அளவில் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த வரிசையில் தற்போது சந்தானமும் இணையவிருக்கிறார். இவர் சற்று வித்தியாசமாக சிந்தித்து மிகப் பிரமாண்டமான ஒரு ஐடியாவுடன் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அதாவது ஒரே இடத்தில் 50க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளைக் கட்டப் போகிறாராம் சந்தானம். இந்த வீடுகளை அவர் விற்கப் போவதில்லையாம். மாறாக வாடகைக்கு விடப் போகிறாராம். மிகப் பெரிய அளவில் இதன் மூலம் நிரந்தரமாக வருமானம் கிடைக்கும் என்பது அவரின் திட்டம் என்கிறார்கள்.

இந்த பிளாட்கள் எங்கு வரப் போகின்றன என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இந்தப் பணிகளில் படு தீவிரமாக இறங்கி விட்டாராம் சந்தானம்...

 

Post a Comment