சென்னை: மாரடைப்பு காரணமாக நடிகர் ராஜேஷின் மனைவி சில்வியா நேற்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மதுரைக்குச் சென்றிருந்தார் ராஜேஷ். மனைவி மரணம் அடைந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் சென்னை திரும்பினார். மனைவியின் உடலைப்பார்த்து அவர் கதறி அழுதார்.
ஜோன் சில்வியாவின் உடலுக்கு இயக்குநர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, பாக்யராஜ், விக்ரமன், நடிகர்கள் கரண், ரமேஷ்கண்ணா, பீலிசிவம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
அவருடைய உடல் அடக்கம், சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3-30 மணிக்கு நடக்கிறது.
மரணம் அடைந்த ஜோன் சில்வியாவுக்கு திவ்யா என்ற மகளும், திலீப் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் திவ்யாவுக்கு திருமணம் ஆகிவிட்டது.
திலீப்புக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
Post a Comment