ஞாயிறுக்கிழமையன்று காலை நேர திரைப்படங்களை ஒளிபரப்புவதில் டிவி சேனல்களுக்கு இடையே போட்டி ஏற்படுவது வாடிக்கை ஒரு சேனலில் விஜய் படம் என்றால் அதற்கு போட்டி சேனலில் அதேபோல் விஜய் படத்தைப் போட்டு ரசிகர்களை அல்லாட விடுவார்கள். இந்த போட்டியில் இப்போது சசிகுமாரும் சிக்கிக்கொண்டார்.
விஜய் டிவியில் சசிகுமார் நடித்த போராளி திரைப்படம் ஒளிபரப்பானது. இது சில தினங்களுக்கு முன் சுதந்திர தினத்தன்று சிறப்பாக ஒளிபரப்பினர். மீண்டும் இந்த திரைப்படத்தினை ஞாயிறன்று மறு ஒளிபரப்பு செய்தனர்.
அதேசமயம் சன் டிவியில் ஞாயிறன்று காலையில் பெரும்பாலும் ஆங்கில டப்பிங் திரைப்படங்களை ஒளிபரப்புவது வழக்கம் இந்த வாரம் போராளிக்கு போட்டியாக சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படத்தை ஒளிபரப்பினார். இதில் எந்த படத்தை பார்ப்பது என்று குழம்பிப்போனது என்னவோ ரசிகர்கள்தான்.
Post a Comment