சமையலில் விதம் விதமாக செய்து ருசியை கூட்டலாம். ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியே பல விதங்களை கொண்டது. அவசர சமையல், பாரம்பரிய சமையல், சுவைப்பயணம், இனிப்புக்காரம், என விதம் விதமான சமையல் நிகழ்ச்சிகள் பிற்பகலில் ஒளிபரப்பாகின்றன. இந்த நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதை அடுத்து பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகள் கடந்த வாரம் முதல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.
இன்றைக்கு எல்லாமே அவசரமாக விட்டது. பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகவும் மாறிவிட்டது. அத்தகைய ரசிகர்களை கவருவதற்காக எளிதான அதேசமயம் சத்தான சமையலை அவசர சமையல் நிகழ்ச்சியில் செய்து காட்டுகின்றார் சமையல் வல்லுனர் ரமேஷ் கணபதி. சித்ரா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியானது திங்கள் அன்று மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
உணவில் சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து, தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்தால் தான் நாம் சமைக்கும் உணவானது சமச்சீரான உணவாகிறது. பண்டைய தமிழர்களின் சிறந்த உணவு வகைகளை நமக்கு எடுத்துக்கூறி சமைத்துக் காட்டுகிறார்கள் சித்த மருத்துவர்கள் கிருபாகரன் மற்றும் செந்தில் கருணாகரன். அனைவரையும் கவர்ந்த பாரம்பரிய சமையல் நிகழ்ச்சி செவ்வாய் தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஆர்த்தி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அன்றாடம் நாம் உணவில் சேர்க்கும் பொருட்களின் மகத்துவத்தையும், அது தீர்க்கும் நோய்கள் பற்றியும் விளக்கிக் கூறுகிறார்.
சமையல் என்றால் ஒரு அறையில் விதவிதமான உணவு வகைகளை செய்து காட்டுவது வழக்கம். ஆனால் இது ஒரு பயணத்தின் இடையே மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சி எனலாம். தமிழகத்தை சுற்றி வலம் வரும் இந்த சுவைப்பயணம் புதன் கிழமையன்று அன்று மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியை சக்கரவர்த்தி தொகுத்து வழங்குகிறார்.
நேயர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் சமையல் திறமையை உலகறியச்செய்யும் நிகழ்ச்சி இனிப்புக் காரம். தெரிந்த புது வகையான இனிப்புக் கார வகைகளை சமைத்து ருசித்து வரும் நிகழ்ச்சி இது. வாரந்தோறும் வெள்ளி அன்று மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Post a Comment