பெங்களூர்: மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கன்னட நடிகர் அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.
கன்னட நடிகர் அர்ஜுனுக்கு 34 வயது ஆகிறது. இவர் கன்னட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் அர்ஜுனுக்கும் லதாஸ்ரீ என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
அர்ஜுன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி லதாஸ்ரீயை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம் கோபித்துக் கொண்டு லதாஸ்ரீ பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
ஆனாலும் அர்ஜுன் அவரை விடவில்லை. நேற்று இரவு குடிபோதையில் மாமனார் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த வீட்டுக் காவலருடன் சண்டை போட்டு, வீட்டுக்குள் புகுந்தார்.
வீட்டில் இருந்த லதாஸ்ரீயையும் அடித்து உதைத்தார். இதுகுறித்து லதாஸ்ரீ பெங்களூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் அர்ஜுனை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
Post a Comment