மாண்டலின் ராஜேஷின் இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில், அவருடன் ஜோடியாகக் கலந்து கொண்டார் நடிகை மீரா ஜாஸ்மின்.
மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷுக்கும் மீரா ஜாஸ்மினுக்கும் நீண்ட நாட்களாக காதல் என்ற பேச்சு மீடியாவில் இருந்துவருகிறது.
ஆனால் அதை சில சமயம் மறுப்பதும், சில சமயம் வெளிப்படையாகக் காட்டுவதுமாகக் கண்ணாமூச்சி ஆடி வந்தார்கள் இருவருமே.
திடீரென்று ஒரு நாள் இருவரும் சேர்ந்து வசிப்பதாக செய்தி வெளியானது. மற்றொரு நாள் இருவருக்கும் கடும் சண்டை என்றார்கள்.
இந்த நிலையில், ராஜேஷின் இசை ஆல்பம் ‘Following My Heart' வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. சத்யம் சினிமாவில் நடந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஆல்பத்தை வெளியிட்டு வாழ்த்தினார் நடிகர் கமல்ஹாஸன். முதல் சிடியை விக்குவிநாயக்ராம் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவின் முக்கியமான இன்னொரு விருந்தினராக வந்திருந்த மீரா ஜாஸ்மின், ராஜேஷுடன் ஜோடியாக மேடையில் நின்று போஸ் கொடுத்தார்.
காதலை உறுதி செய்தார் மீரா...
இந்த ஆல்பத்தில் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் மீரா ஜாஸ்மின் நிருபர்களிடம் பேசினார். அவர் கூறும்போது, "நிறைய சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை இல்லை. மனசுக்கு பிடித்த சில படங்களில் மட்டும் நடித்தால் போதும் என்று நினைக்கிறேன். இப்போது, மலையாளத்தில் தற்போதைய கேரளா அரசியலை மையப்படுத்தி எடுக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.
இந்த ஆல்பத்தில் நான் நடிப்பதற்காக ராஜேஷ் என்னை அணுகியபோது, முதலில் நான் மறுத்தேன். இருந்தாலும், நான்தான் இந்த ஆல்பத்தில் நடிக்க வேண்டும் என ராஜேஷ் பிடிவாதமாக இருந்ததால் அவருக்காக நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆல்பம் மிகவும் நன்றாக வந்துள்ளது," என்றார்.
ராஜேஷூடன் காதலா? இருவரும் சேர்ந்து வசிப்பதாகக் கூறப்படுவது குறித்து? கேட்டபோது, "ராஜேஷை நான் அதிகமாக காதலிக்கிறேன். அது உண்மைதான், ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை," என்றார்.
Post a Comment