சசிகலா அக்கா மகன் பாஸ்கரன், தன் பெயரை பாஸ் என்று மாற்றிக் கொண்டு ஹீரோவாக அறிமுகமாகும் தலைவன் படத்தில், அவருக்கு ஜோடியாக சனா கான் நடிக்கிறார்.
இன்னொரு ஜோடியாக நிகாஷா படேல் அறிமுகமாகிறார்.
புளு ஓஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாஸ் நடிக்கும் தலைவன் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.விஜய்காந்த நடித்த உளவுத்துறை படத்தை இயக்கிய ரமேஷ் செல்வன் இந்த படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
சந்தானம், சுமன், ஜெயபிரகாஷ், இளவரசன், வின்சன்ட் அசோகன், சுரேஷ் கிருஷ்னா, இளவரசு, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஜாபர் கதை வசனம் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு அடுத்த மாதம் 15 ம் தேதி சென்னையில் துவங்கி கோவா, ஹைதராபாத்,மூணார் மற்றும் சிக்கிம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
பிப்ரவரியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
Post a Comment