காதலி அஞ்சனாவுடன் 'நான் ஈ' நானிக்கு திருமண நிச்சயதார்த்தம்!

|

Naan Ee Nani Gets Engaged

நான் ஈ படத்தில் நடித்த பிரபல இளம் தெலுங்கு நடிகர் நானிக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அஞ்சனா என்பவரை அவர் மணக்கிறார். மணமகள் விசாகப்பட்டினத்தில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

இது ஒரு காதல் திருமணமாகும். சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் விசாகப்பட்டினத்தில் சந்தித்தனர். அப்போது நானி ரேடியோ அறிவிப்பாளராக இருந்தார். அந்த சந்திப்பு பின்னர் தொடர்ந்தது. காதல் மலர்ந்தது.

பின்னர் நானி நடிகரான பின் இருவர் காதலும் வெளிச்சத்துக்கு வந்தது. இதுபற்றி பத்திரிகைகள் எழுதியபோது, அனைவரையும் திட்டித் தீர்த்தார் நானி. இல்லவே இல்லை என்றெல்லாம் மறுப்பு சொன்னார்.

கடைசியில் செய்தி உண்மையாகிவிட்டது. இருவருக்கும் நேற்று விசாகப்பட்டணத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. டிசம்பரில் திருமணம் நடக்கிறது.

நானி இப்போது தெலுங்கில் கவுதம் மேனன் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்து வருகிறார்.

 

Post a Comment