மும்பை: தென்னிந்தியாவில் எந்த பாலிவுட் நடிகருக்கும் இல்லாத அளவு ரசிகர் - ரசிகைகள் ஷாரூக்கானுக்கு உண்டு.
அவரும் அதைப் புரிந்து கொண்டு, தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு பாத்திரமாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் வந்த ராஒன் படத்தில் கூட, அவர் தென்னிந்திய இளைஞனாகத்தான் நடித்திருந்தார்.
இப்போது தனது அடுத்த படத்துக்கு சென்னை எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டியுள்ளார்.
மும்பையிலிருந்து சென்னை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரெயிலில் கதாநாயகன் பயணிக்கிறான். பயணத்தின்போது என்ன நடக்கிறது? என்பதுதான் இந்தப் படம்.
ஷாருக்கானுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிப்பவர் தீபிகா படுகோனே. ஷாரூக்கானால் ஓம் சாந்தி ஓம் படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர் தீபிகா என்பது நினைவிருக்கலாம்.
படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாருக்கானை வைத்து ரோஹித் ஷெட்டி எடுக்கும் முதல் படம் ஆகும். இதற்கு முன்பு அஜய் தேங்கன் நடிப்பில் எட்டுப் படங்களை தயாரித்திருக்கின்றார். படப்பிடிப்பு, சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் நடக்கவிருக்கிறது.
Post a Comment