சன்னி லியோனும், வினோத பழக்கமும்

|

Sunny Leone S Strange Obsession   

மும்பை: ஜிஸ்ம் 2 படத்தில் நடித்துள்ள ஆபாச நடிகை சன்னி லியோன் அடிக்கடி தண்ணீரால் காலை கழுவிக் கொண்டே இருப்பாராம்.

ஆபாச படங்களில் நடிக்கும் கனடா வாழ் இந்தியரான சன்னி லியோன் பிக்ஸ் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் இந்தியாவில் பிரபலமானார். இதையடு்தது அவருக்கு பாலிவுட் நடிகையும், இயக்குனருமான பூஜா பட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே கவர்ச்சி காட்டத் தயங்காத பாலிவுட் நடிகைகளுக்கு மத்தியில் இந்திக்கு வந்துள்ள சன்னி தன் பங்கிற்கு கன்னாபின்னா என்று கவர்ச்சியாக நடித்துள்ளார்.

சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். சன்னி லியோனுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உள்ளதாம். அவர் அடிக்கடி தண்ணீரில் காலை கழுவிக் கொண்டே இருப்பாராம். முதலில் இதைப் பார்த்த ஜிஸ்ம் 2 படக்குழுவினர் சன்னிக்கு என்ன ஆச்சு. இப்படி அடிக்கடி கால் கழுவுகிறாரே என்று நினைத்துள்ளனர். அதன் பிறகு அவர்களுக்கு பார்த்து பார்த்து பழகிவிட்டதால் கண்டுகொள்ளவில்லை.

ஒவ்வொரு காட்சிக்கும் இடையே சில சமயம் 15 முதல் 20 நிமிடத்திற்கு ஒரு முறை கூட காலில் தண்ணீர் ஊற்றி கழுவுவாராம். இயக்குனர் பிரேக் என்று சொன்னால் அடுத்த நிமிஷம் சன்னி காலைக் கழுவச் சென்றுவிடுவாராம். அவரின் இந்த வினோத பழக்கத்தை வைத்தே படக்குழுவினர் சன்னியை கிண்டலடித்துள்ளனர்.

 

Post a Comment