மீனாளின் புது அவதாரம்!

|

Aadukalam Meenal Lands New Role

பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நார்த்தங்கா என்ற கேரக்டரில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் மீனாள். இந்த கேரக்டர் தனக்குப் பெரும் பெயரை வாங்கித் தரும் என்றும் மனசெல்லாம் உற்சாகம் பொங்க சந்தோஷமாக கூறுகிறார் மீனாள்.

தவமாய் தவமிருந்துதான் மீனாளின் முதல் படம். சேரனால் அறிமுகப்படுத்தப்பட்ட மீனாள், முதல் படத்திலேயே நல்ல பெயரை வாங்கினார். ஆடுகளம் படத்திலும் இவருக்கு அழுத்தமான பாத்திரம் கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது பாரதிராஜாவின் பார்வையில் சிக்கி வெயிட்டான ரோலை வாங்கி விட்டார். அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தில் இவருக்கு முக்கியமான பாத்திரத்தை அளித்துள்ளாராம் பாரதிராஜா.

இதுகுறித்து மீனாள் கூறுகையில், தனது அன்னக்கொடியும் படத்தில் நார்த்தங்கா என்ற கேரக்டரில் என்னயோ அல்லது தவமாய் தவமிருந்து படத்தில் நடித்தவரையோ போட வேண்டும் என்று நினைத்துள்ளார் பாரதிராஜா. இதையடுத்து என்னை வரவழைத்துப் பேசினார். அப்போது தவமாய் தவமிருந்து படத்தில் நடித்தது நான்தான் என்று அவரிடம் கூறியபோது அவரால் நம்பவே முடியவில்லை. அப்படியே அசந்து போய் விட்டார்.

இந்த நேரத்தில் நான் சேரன் சாருக்கும், ஆடுகளம் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த வெற்றிமாறனுக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்த இரண்டு படங்களும்தான் பாரதிராஜவிடம் என்னை கொண்டு போய் சேர்க்க உதவியுள்ளன என்றார் நெஞ்செல்லாம் சந்தோஷம் பொங்க.

அன்னக்கொடி படத்தில் நடித்து வரும் மீனாள் ஒவ்வொரு காட்சியையும் நடித்து முடிக்கும்போது பாரதிராஜா பிரமாதம் என்று கூறி பாராட்டித் தள்ளுகிறாராம். இத்தனை நாள் எங்கம்மா இருந்தே என்றும் பாராட்டுகிறாராம்.

தற்போது தங்கர் பச்சானின் அம்மாவின் கைபேசி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மீனாள். தங்கரின் மனைவி வேடத்தில் வருகிறாராம். ஏற்கனவே பள்ளிக்கூடம் படத்திலும் தங்கருக்கு ஜோடி போட்டவர் மீனாள் என்பது நினைவிருக்கலாம். அதேபோல கலியுகம், மச்சான் ஆகிய படங்களையும் எதிர்பார்த்துள்ளார் மீனாள்.


விவேக்குடன் கவர்ச்சி கலந்த காமெடி கேரக்டர்களில் நிறைய நடித்துள்ள மீனாள் இப்போது முக்கிய வேடங்களில் நடிக்கப் புகுந்திருப்பது அவருக்கு நிச்சயம் ஒரு புதிய அவதாரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

 

Post a Comment