நடிகர் - நடிகைகள் மேனேஜர் வைத்துக் கொள்ளக்கூடாது - கேரளவில் திடீர் கெடுபிடி

|

Kerala Cinema Bans Artist Managers

கொச்சி: இனி நடிகர் நடிகைகள் மேனேஜர் என தனியாக ஒருவரை வைத்துக் கொள்ள தடை விதித்துள்ளது மலையாள பட உலகம்.

இந்த மேனேஜர்களுக்கு சம்பளமாக நடிகர், நடிகைகளின் சம்பளத்தில் 15 சதவீதம் தரப்படுகிரது. இந்தப் பணத்தை தயாரிப்பாளர்களிடம் இருந்தே நடிகர் நடிகைகள் வாங்கிக் கொடுத்தார்கள்.

மேனேஜர்களுக்கு கமிஷன் கொடுக்காதவர்களின் படங்களுக்கு நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. படப்பிடிப்புக்கு போகாமல் வேண்டுமென்றே தாமதம் செய்தனர்.

சமீபத்தில் பத்மபிரியாவும் இதுபோல் தொந்தரவு கொடுத்தார். ‘நம்பர் 66 மதுரை பஸ்' என்ற மலையாளப் படத்தில் நடிக்கும் பத்மபிரியா, படத்தை முடித்துத் தர வேண்டும் என்றால் தனது மேனேஜருக்கு கொடுக்க கூடுதல் பர்சன்டேஜ் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தாக இயக்குநர் நிஷாந்த் புகார் தெரிவித்திருந்தார். தயாரிப்பாளர் சங்கத்திலும் பத்மபிரியா மீது புகார் தரப்பட்டது.

இதுகுறித்து அனைத்து திரைப்பட சங்கங்களுடனும் தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை நடத்தியது. இறுதியாக நடிகர் நடிகைகள் இனி மேனேஜர்கள் வைத்துக்கொள்ள தடை விதிப்பது என்றும், இதனை அனைத்து சங்கத்தினரும் கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

சம்பள விஷயங்கள் குறித்து இனி நடிகர் - நடிகைகளிடம் நேரிலேயே பேசிக் கொள்ள தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

Post a Comment