இங்கிட்டு தீபிகா, அங்கிட்டு கத்ரீனா: ஜமாய்க்கும் ரன்பிர் கபூர்

|

Katrina Spends Night With Ranbir Kapoor

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தனக்கு நடிகைகள் தீபிகா படுகோனே மற்றும் கத்ரீனா கைப் மீதுள்ள உணர்வு நட்பா, காதலா என்பதே புரியாமல் தவிக்கிறாராம்.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் ஒரு காலத்தில் காதலர்களாக வலம் வந்தனர். பின்னர் காதல் கசந்து ஆளுக்கொரு பக்கம் சென்றுவிட்டனர். அதன் பிறகு தீபிகா தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவை காதலித்தார். அந்த காதல் திடீர் என்று முறிந்துவிட்டது. இந்நிலையில் தீபிகா மீண்டும் ரன்பிர் கபூருடன் சேர்ந்துவிட்டதாக பாலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

இதற்கிடையே சல்மான் கானைப் பிரிந்த நடிகை கத்ரீனா கைபும் ரன்பிருடன் நெருக்கமாக உள்ளார் என்று கூறப்படுகிறது. அண்மையில் ரன்பிரும், தீபிகாவும் சேர்ந்து கேங்ஸ் ஆப் வசீபூர் II என்ற இந்தி படம் பார்த்துள்ளனர். படம் முடிந்து தீபிகா கிளம்பியவுடன் ரன்பிர் வீட்டுக்கு கத்ரீனா வந்துள்ளார். அவர் வந்தபோது நள்ளிரவு 1.30 மணி. அன்றைய இரவை அவர் ரன்பிர் வீட்டிலேயே கழித்தார் என்று கூறப்படுகிறது.

நடிகைகள் அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே, கத்ரீனா கைப் என்று 3 பேருடன் நேரம் செலவிட்டு வருகிறார் ரன்பிர். கத்ரீனா ரன்பிரை தனது நண்பர் என்று சொல்லிக்கொண்டு நள்ளிரவில் எதற்காக அவரது வீட்டுக்கு சென்றார் என்று பலரும் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

Post a Comment