கவர்ச்சிப் புயலாக பாலிவுட்டில் நுழையும் தமன்னா!

|

Tamanna Pairs Up With Ajay Devgan   

தமிழ் சினிமாவிலிருந்து 'மர்மமான' முறையில் வெளியேறிவிட்ட தமன்னா, மீண்டும் கோடம்பாக்கம் திரும்ப மாட்டார் போலிருக்கிறது.

தெலுங்கில் மகா பிஸியாக இருந்த அவர்... இப்போது இந்திப் பட உலகில் அழுத்தமாகக் கால் பதிக்கிறார்.

சாஜித் கானின் ஹிம்மத்வாலா படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடி தமன்னாதான்.

அதுமட்டுமல்ல, இதுவரை காட்டாத அளவுக்கு கவர்ச்சி விருந்தே வைத்திருக்கிறாராரம் அந்த இந்திப் படத்தில். சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்களில் ஸ்லிம் ப்ளஸ் கவர்ச்சியில் அம்சமாகக் காட்சியளிக்கிறார் தமன்னா.

இந்தப் போஸ்டர்கள் வெளியான அன்றே, தமன்னாவுக்கு இந்தியில் எக்கச்சக்க ரசிகர்கள் சேர்ந்துவிட்டார்களாம். அவரை நேரிலும் சந்தித்து, தங்களை தமன்னாவின் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டார்களாம்.

பாலிவுட்டில் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடுவாங்களோ!

 

Post a Comment