சென்னை: மெல்லிசை மன்னர் எனப்புகழப்படும் எம்எஸ் விஸ்வநாதன் பல ஆண்டுகளுக்குப் பிறகு, ரசிகர்களை தன் இசையால் மகிழ்விக்க வருகிறார். அவருடன் பல ஜாம்பவான்களும் மேடையேறுகிறார்கள்.
ஜெயா டிவி ஆரம்பிக்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டியும், மெல்லிசை மன்னர் திரையுலகுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதற்கு விழா எடுக்கும் விதத்திலும் பிரமாண்டமான இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு நினைத்தாலே இனிக்கும் என்று பெயரிட்டுள்ளனர். வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்ட கலைஞர்கள், அரசியல் - சமூகத் தளங்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மெல்லிசை மன்னரைப் பாராட்டுகிறார்கள்.
மக்கள் திலகம் எம்ஜிஆரால் 1950-ல் ஜெனோவா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர் எஸ்எஸ்விஸ்வநாதன்.
1952-ல் எம்எஸ்வியையும் டிகே ராமமூர்த்தியையும் 'மெல்லிசை மன்னர்கள்' என பட்டம் சூட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
அதன் பிறகு 513 தமிழ்ப் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முறையே 29 மற்றும் 76 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
Post a Comment