அடடா... வட போச்சே!

|

Trisha Shock Over Prabhu Deva S Decision   

ரொம்ப கடுப்பிலும் அதிர்ச்சியிலும் இருக்கிறாராம் நடிகை த்ரிஷா.

பின்னே.. இந்தியில் எப்படியும் தன்னை மீண்டும் நிலைநிறுத்தும் என்று எதிர்ப்பார்த்த படத்திலிருந்து திடீரெனத் தூக்கியடித்தால்... என்னதான் செய்வார்?

தெலுங்கில் பிரபு தேவா இயக்கிய முதல் படம் ‘நு ஒஸ்தனன்டே நேனொ ஒத்தன்டனா' . த்ரிஷாதான் நாயகி.

இதே படம் தமிழில் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் என்ற பெயரில் வெளியாகி வெற்றி கண்டது. இதிலும் த்ரிஷாதான் நாயகி.

இப்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் பிரபுதேவா. அதிலும் திரிஷா நாயகியாக நடிப்பார் என கூறப்பட்டது. திரிஷா பொருத்தமாக இருந்ததால் அவரையே தேர்வு செய்ய பிரபுதேவா திட்டமிட்டு இருந்தாராம். விஷயத்தைக் கேள்விப்பட்டு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தார் த்ரிஷா.

காட்டா மீட்டாவில் கோட்டை விட்டதை பிரபு தேவா படத்தில் பிடித்துவிடலாம் என்பது அவர் கணக்கு.

ஆனால் திடீரென பிரபு தேவாவின் பார்வை கமல் மகள் ஸ்ருதி பக்கம் திரும்பிவிட்டதாம். இதனால் திரிஷா அதிர்ச்சியாகியுள்ளார்.

சமீபத்தில் நடந்த இரவு விருந்து ஒன்றில் நயன்தாராவும், திரிஷாவும் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டினர். அதன்பிறகு தொடர்ந்து இருவரும் நெருக்கமான தோழிகளாக மீடியாவுக்கு பேட்டிகளும் அளித்து வருகின்றனர்.

இதனால் கோபமடைந்துதான் த்ரிஷாவைக் கழட்டிவிட்டார் பிரபு தேவா என ஒரு பக்கம் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.

இதுக்காகவெல்லாமா வாய்ப்பு தர மறுப்பாங்க?!

 

Post a Comment