லிங்குசாமியுடன் மீண்டும் இணைகிறார் அஜீத்?

|

Ajith Join With Lingusamy Again

இயக்குநர் லிங்குசாமி தன் படங்கள் குறித்து எப்போது பத்திரிகையாளர்களிடம் பேசினாலும், ஒரு படத்தைப் பற்றி மட்டும் பேசவே மாட்டார். அந்தப் படம் அஜீத் நடித்த ஜீ!

2005-ல் அஜீத் - த்ரிஷா நடிப்பில் உருவான இந்தப் படத்தில் வித்யாசாகர் இசையில் நல்ல பாடல் கூட உண்டு. ஆனால் படம் படு சுமாராகப் போனதால், ஹீரோ அஜீத்தும் சரி, இயக்குநர் லிங்குசாமியும் சரி.. இந்தப் படத்தை மறக்க விரும்புவது இயல்புதான்.

ஆனால் இப்போது இந்த இருவரும் மீண்டும் இணையும் வாய்ப்பு உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு அஜீத் இந்தப் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இயக்குநர் லிங்குசாமி இதுபற்றிக் கூறுகையில், "அஜீத்துடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என ஆசைதான். ஆனால் அதற்கு நல்ல ஸ்க்ரிப்ட் வேண்டும். அஜீத்துக்கு ஏற்றமாதிரி அமைய வேண்டும்," என்று கூறியுள்ளார்.

இப்போது சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்கும் வேலையில் பிஸியாக உள்ளார் லிங்குசாமி.

 

Post a Comment