மும்பை: பாலிவுட்டுக்கு சன்னி லியோன் வருவதற்கு முன்பு அவரது வேடத்தை செய்து வந்தவர் சல்மான் கான் தான். படத்தில் பாதி நேரம் சட்டை போடாமலேயே சிலம்பிக் கொண்டிருந்தார். இப்போது அவருக்குப் போட்டியாக சன்னி லியோன் வந்துவிட்டார். ஆனால் கொஞ்சம் போல சட்டை போடும் சன்னி லியோனுக்கு ரொம்பப் பிடித்தவர் சட்டையே போடாத சல்மான்தானாம் (அதானே, இனம் இனத்தோடதானே சேரும்).
யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து நடிக்க நான் தயார். ஆனால் என்னோட ஹீரோக்கள் லிஸ்ட்டில் டாப்பில் இருப்பவர் சல்மான்தான். எப்படியாவது அவருடன் சேர்ந்து விட வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசுகிறார் சன்னி.
சல்மானும், சன்னியும் ஜோடி சேர்ந்து நடித்தால் பார்க்கவே பரவசமாக இருக்கும் என்று பாலிவுட்டிலும் ஏற்றிப் பேசி வருகிறார்களாம். இதனால் சன்னிக்கு, சல்மானுடன் சேர வேண்டும் என்ற லட்சியம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறதாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னோட விருப்பப் பட்டியலில் முதலில் இருப்பவர் சல்மான் தான். நான் யாருடனும் சேர தயார். ஆனால் முதலில் சல்மானுடன் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன் என்று பரவசத்துடன் கூறுகிறார் சன்னி.
பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவை சல்மான் தொகுத்து வழங்கியபோது கூட சல்மானுடன் டேட்டிங் போக விரும்புவதாக கூறியவர்தான் சன்னி. அதேபோல சல்மானும் கூட சன்னி மீது ஒரு பார்வையுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. தனது படம் ஒன்றில் சன்னியை நடிக்க வைக்கவும் அவர் தீர்மானித்திருப்பதாகவும் கூறப்பட்டது. இருந்தாலும் அவசரப்படாமல், கொஞ்சம் பொறுமையாக இருக்க அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
பாலிவுட்டுக்கு எந்தப் புதுமுக நடிகை வந்தாலும் அவர்களை அரவணைத்து, கைட் போல வழிகாட்டி நடை போட வைப்பதில் சல்மான் கான் எப்போதும் துடிப்புடன் இருப்பார். இப்படித்தான் காத்ரீனா கைப், ஜரீன் கான், ஸ்னேகா உல்லால் என பலருக்கும் அவர் பாடிகார்ட் போல திகழ்ந்தார். இப்போது சன்னியையும் அவர் அரவணைப்பார் என்று பேசிக் கொள்கிறார்கள்.
அது சரி, 'சம்மர்' போனா அடுத்து 'சன்னி' வந்துதானே ஆக வேண்டும்...!
+ comments + 1 comments
அதானே, இனம் இனத்தோடதானே சேரும்.... What u means??? Hes such a good being human!!! so please don't be silly ok....
Post a Comment