மக்கள் டிவியின் வளாகம் நிகழ்ச்சியில் பங்குச்சந்தை விபரங்களை அசராமல் சொல்லும் அருள்செல்வி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வருவதற்கு முன்பு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்தவராம். திருமணத்திற்குப்பின்னர் மக்கள் தொலைக்காட்சியில் பங்குச்சந்தை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையை செய்து வருகிறார்.
வளாகம் நிகழ்ச்சியோடு இப்பொழுது வேளாண் சந்தை, ஏற்றுமதி இறக்குமதி, வேலைவாய்ப்பு தகவல் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமல்ல கைவினைப் பொருட்கள் செய்வதில், ஓவியம் வரைவதில், தஞ்சாவூர் ஓவியங்கள் வரைதல் போன்ற கலைநயம் மிக்க வேலைகள் மீது அருள் செல்விக்கு ஈடுபாடு அதிகம். அதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறார். யோகா முறைப்படி கற்றுள்ளதால் அதனால் பயிற்சியும் அளித்து வருகிறார்.
நிகழ்ச்சி தொகுப்பாளாராக மட்டுமல்ல சாதாரணமாக பேசும் போதே ஆங்கிலம் கலப்பில்லாமல்தான் பேசுவாரம் அருட்செல்வி. சீரியலில் நடிக்க விருப்பமில்லை என்றாலும் விளம்பரப்படங்களில் நடிக்க ஆர்வம் அதிகமாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இன்னமும் அமையவில்லை என்கிறார் அருள்செல்வி. ஒரு தயாரிப்பாளராக நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசையும் அருள்செல்விக்கு இருக்கிறது.
Post a Comment