சென்னை: ராஜ் டிவியின் செய்தி தயாரிப்பாளராக இருந்த நிஜந்தன், வின் டிவிக்கு தாவி உள்ளார். வின் டிவியின் புதிய தலைமை நிர்வாகியாக நிஜந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வின் டிவியின் நிகழ்ச்சிகளின் தரத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சன், ஜெயா, மக்கள், விஜய், ராஜ், தமிழன், கலைஞர், இமயம், மெகா, இசைஅருவி, ஜீ தமிழ், வசந்த், கே, எஸ்.எஸ்.மியூசிக், புதிய தலைமுறை, வின் என்று பல டிவி சேனல்கள் நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட்டு வருகின்றன.
ஒவ்வொரு சேனல்கள் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, நேயர்களை கவர்ந்து வருகின்றன. இதனால் டிவி சேனல்களுக்கு இடையே யார் சிறந்த டிவி சேனல் என்ற போட்டி நிலவுகிறது. செய்தி ஒளிப்பரப்பில் அதிக நேயர்களுடன் முதலிடத்தில் இருந்த சன் டிவியை பின்னுக்கு தள்ளி, தற்போது புதிய தலைமுறை டிவி முதலிடத்தை பிடித்துள்ளது.
இதேபோல ஒவ்வொரு டிவி சேனல்களும், புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி நேயர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் ராஜ் டிவியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செய்தி தயாரிப்பாளராக இருந்த நிஜந்தனை தற்போது வின் டிவிக்கு தாவி உள்ளார்.
வின் டிவியின் புதிய தலைமை நிர்வாகியாக நிஜந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் வின் டிவியின் செய்திப் பிரிவில் தேவையான மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும், பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தற்போது டிவி சேனல்களுக்கு இடையிலான போட்டியில், வின் டிவியும் இணைந்துள்ளது.
Post a Comment