பழம்பெரும் நடிகர் ஏ.கே.ஹங்கல் மரணம்

|

Veteran Actor Ak Hangal Passes Away

மும்பை: பழம்பெரும் நடிகர் ஏ.கே.ஹங்கல் மும்பையில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 97.

மும்பை சான்டாக்ருஸில் உள்ள ஆஷா பரேக் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவர் மரணமடைந்தார். ஆகஸ்ட் 14ம் தேதி தனது வீட்டு பாத்ரூமில் அவர் வழுக்கி விழுந்ததில் தொடை எலும்பு முறி்ந்து விட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மரணத்தைத் தழுவினார்.

225க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார் ஹங்கல். நமக் ஹாரம், ஷோலே, செளகீன், ஆய்னா, பவார்ச்சி உள்ளிட்ட பல படங்களில் அவரது கேரக்டர் ரோல்கள் பேசப்பட்டன.

50 வயதில்தான் நடிக்கவே வந்தார் ஹங்கல் என்பது வியப்பான ஒரு செய்தியாகும். 1966ம் ஆண்டு வெளியான தீஸ்ரி கசம் படம்தான் அவருக்கு முதல் படம். பிறகு, ஷாகிரித் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து அவர் தந்தை, மாமா உள்ளிட்ட கேரக்டர் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். கேரக்டர் ரோலா, கூப்பிடுங்கள் ஹங்கலை என்று கூறும் அளவுக்கு அந்த பாத்திரங்களாக மாறி வாழ்ந்தவர் ஹங்கல்.

 

Post a Comment