சின்னச் செய்திகளை தாங்கி வந்து ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த ஜீ தமிழ் தொலைக்காட்சியின் டாப் 10 நியூஸ் நிகழ்ச்சி 1000 மாவது எபிசோடினை எட்டியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் டாப்-10 நியூஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வரும் நிகழ்ச்சி. தமிழகம், இந்தியா, உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு என 5 தலைப்புகளில் 50 செய்திகளை குறுகிய நேரத்தில் தருவது இந்த நிகழ்ச்சிக்கான ஸ்பெஷல்.
குட்டிக் குட்டிச் செய்திகள் சட்டென வந்து போனாலும் மனதில் தங்கும் வகையில் சுவாரஸ்யமாக அமைந்திருக்கும். டாப்-10 தமிழகம் நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படங்கள் குறித்த தகவல்களும், கோலிவுட்டில் நிகழும் ருசிகர சம்பவங்களும் இடம் பிடிக்கிறது. டாப்-10 இந்தியாவில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் நிகழும் ஒட்டுமொத்த நிகழ்வுகளை விவரிக்கிறது.
உலகெங்கும் நிகழும் வினோதங்கள், பார்வையாளர்களை ஆச்சரிய உலகிற்குஅழைத்து செல்லும் வித்தியாசமான நிகழ்வுகளை டாப்-10 உலகம் விவரிக்கிறது. ஹாலிவுட் திரையுலகம் குறித்த தகவல்களை டாப்-10 பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் தருகிறார்கள். இதில் அயல்நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களின் தொகுப்பும் இடம் பிடிக்கிறது. விளையாட்டு உலகம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை டாப்-10 விளையாட்டு நிகழ்ச்சி வழங்குகிறது.
இரவு 11.30 மணிக்கு ஒளிபரப்பானாலும் இந்த நிகழ்ச்சிக்கு என தனி நேயர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சி விரைவில் ஆயிரமாவது எபிசோடை எட்டவுள்ளது.
Post a Comment