இளையராஜாவை கவுரவிக்க 1000 கிலோ எடையில் 100 மீட்டர் மெகா கேக்!

|

சென்னை: இந்தியாவின் பிரபல கேக் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இளையராஜாவைக் கவுரவிக்க 1000 கிலோ எடை கொண்ட, 100 மீட்டர் மெகா கேக் ஒன்றை தயாரித்து வருகிறது.

அந்த கேக்கில் இளையராஜாவின் 1000 புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.

salute ilayaraja with 100 meter cake
Close
 

முட்டை கலக்காமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சைவ கேக்கில், இளையராஜா தன் இசைப் பயணத்தை ஆரம்பித்த அன்னக்கிளி தொடங்கி, அவர் நடத்திய கச்சேரிகள், சமீபத்திய ரிலீசான நீதானே என் பொன்வசந்தம் வரை புகைப்படங்களை தேதி வாரியாக அதில் இடம்பெறச் செய்கின்றனர்.

வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளில் இந்த கேக் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

இந்த கேக்கை 25 பேர் கொண்ட குழு தயாரித்துள்ளது. 600 கிலோ சாக்லேட், 150 கிலோ பிரஷ் க்ரீம், 80 கிலோ சர்க்கரை, 240 கிலோ கறுப்பு சாக்லேட், 100 கிலோ வெள்ளை சாக்லேட், 60 கிலோ ஜெல் மற்றும் 600 சர்க்கரை ஏடுகள் கொண்டு இந்த கேக்கை தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் வர்த்தக தலைவர் விபுல் மெஹ்ரோதா கூறுகையில், "ஒரு சமூக சேவை நோக்கில் இந்த கேக்கை தயாரித்துள்ளோம். கண்காட்சிக்குப் பின்னர், ஒரு சமூக நல அமைப்பிடம் இந்த கேக்கின் விற்பனை உரிமையை வழங்கவிருக்கிறோம்," என்றார்.

கடந்த ஆண்டு, தமிழ் சினிமாவின் 70 ஆம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் இதே நிறுவனம் ஒரு மெகா கேக் செய்தது நினைவிருக்கலாம்.

 

Post a Comment