சென்னை: இயக்குனர் சற்குணம் தனுஷை வைத்து எடுக்கும் சொட்ட வாளக்குட்டி படத்தில் ஹன்சிகாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
விருதுகளைக் குவித்த வாகை சூடவா படத்துக்குப் பிறகு இயக்குநர் சற்குணம் எடுக்கும் படம் சொட்ட வாளக்குட்டி.இந்த படத்தில் தனுஷ் தான் ஹீரோ. அவர் தற்போது இந்தி படமான ராஜ்னாஹாவில் பிசியாக இருப்பதால் அதை முடித்த பிறகு சற்குணம் படத்தில் நடிக்க வருகிறார். வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் தனுஷ் குத்துவிளக்கு வியாபாரியாக வருகிறாராம். அவருக்கு ஜோடியைத் தேடி அலைந்த சற்குணம் இறுதியில் ஹன்சிகாவை எடுக்கலாமே என்று முடிவு செய்துள்ளார். இது குறித்து ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடிந்து வருகிறதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தனுஷ் வரும் வரைக்கும் பாடல்களை ரெடியாக்கும் வேலையில் இறங்கியுள்ளார் சற்குணம். ஹன்சிகா தனுஷின் மாப்பிள்ளை படம் மூலமாகத் தான் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு தற்போது தான் அவருக்கு தனுஷுடன் மீண்டும் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்கிறார்.
சொட்ட வாள்ககுட்டியில் நடிக்க ஒப்புக் கொண்டால் அவர் சிம்பவுடன் 2 மற்றும் அவரது எதிரி, நண்பன் தனுஷுடன் 2 படங்களில் நடித்தவர் ஆவார்.
Post a Comment