பில்லா-2 ரெக்கார்டை பீட் செய்தது 'நீதானே என் பொன்வசந்தம்' டிரெய்லர்

|

சென்னை: தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் படம் "நீதானே என் பொன்வசந்தம்" என்பது நிரூபணமாகியிருக்கிறது.

neethaane en ponvasantham beats    | இசை வெளியீடு  
Close
 
கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்ட 2 நாட்களில் அதனை பார்வையிட்டோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் வெயிட்...

அஜித்தின் பில்லா-2 படத்தின் டிரெய்லரை இணையதளத்தில் 2 நாட்களில் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 5.15 லட்சம். இதுதான் அப்போதைய ரெக்கார்ட்!

இந்த ரெக்கார்டை கடந்த 48 மணி நேரத்தில் தூக்கி சாப்பிட்டிருக்கிறது "நீதானே என் பொன்வசந்தம்"! எத்தனை லட்சமா? வெயிட்...

2.26 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் டிரெய்லரில் ஜீவா, சமந்தா, சந்தானம் ஆகியோர் தோன்றுகின்றனர்.


இப்ப கணக்கைச் சொல்றோம்..

"நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் டிரெய்லரை 48 மணி நேரத்தில் பார்வையிட்டோரின் எண்ணிக்கை 7,03,659! அப்படிப் போடுங்க என்கிறீர்களா?

நீ தானே என் பொன்வசந்தம்- டிரெய்லர்

 

Post a Comment