சென்னை :‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் திரைப்பட உலகில் இசையமைக்க ஆரம்பித்து 20 ஆண்டுகாலம் ஆவதை ஒட்டி சென்னையில் பிரமாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னை காமராஜர் அரங்கில் அக்டோபர் மாதம் இந்த விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசை வாழ்க்கையை தொடங்கியவர் ஏ.ஆர். ரஹ்மான். தேசிய விருதுகளும், இரட்டை ஆஸ்கர் விருதுகளும் பெற்று தமிழ் திரை உலகிற்கு பெருமைத் தேடித்தந்தவர்.
ரஹ்மான் இசையமைக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகி விட்டன. இதைக் கொண்டாடும் விதமாகவும், ரஹ்மானைக் கௌரவிக்கும் விதமாகவும் பிரம்மாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘RAINDROPSS’ என்ற இசைக்குழு சார்பில் அக்டோபர் 21 ஆம் தேதி சென்னையில் உள்ள காமராஜர் நினைவு அரங்கத்தில் வைத்து ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. ரஹ்மானை கௌரவிக்கும் விதமாக பிரபல இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் என திரைத் துறையை சேர்ந்த பலரும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். என்று இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ள ‘RAINDROPSS’ குழுவின் தலைவரும், ரஹ்மானின் தங்கையுமான ஏ.ஆர். ரஹைனா தெரிவித்துள்ளார்.
Post a Comment