மம்முட்டியின் மெகா மனசு... சிவாகாசி விபத்தில் காயம்பட்டவர்களுக்கு ரூ 40 லட்சம் உதவி!

|

Mammootty Helps Rs 40 Lakh Medicine Burn Victims

சென்னை: சமீபத்தில் சிவகாசியில் 38 பேரை பலி கொண்ட கொடிய பட்டாசு தொழிற்சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ 35 லட்சம் மதிப்புள்ள அக்னிஜித் மருந்துப் பொருள்களை இலவசமாக அளித்து உதவியுள்ளார் நடிகர் மம்முட்டி.

சிவகாசி விபத்து குறித்து தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களோ, அரசியல்வாதிகளோ கூட கண்டுகொள்ளாத நிலையில், தாமாக முன்வந்து மம்முட்டி செய்துள்ள இந்த மாபெரும் உதவி நெகிழ வைத்துள்ளது.

தீக்காயங்களுக்கு சிறந்த நிவாரணமாக இந்த அக்னிஜித் மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்தைத் தயாரிக்கும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மம்முட்டிக்கு சொந்தமானதாகும்.

சிவாகாசி விபத்தில் கடுமையாக தீக்காயங்கள் அடைந்து அவதிக்குள்ளாகியுள்ளோரைக் காக்க, அக்னிஜித் மருந்து வேண்டும் என பதஞ்சலி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர் சிவாகாசி அரசு மருத்துமனையைச் சேர்ந்தவர்கள்.

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய மம்முட்டிக்கு விஷயம் தெரிய வந்தது. உடனே மொத்த மருந்துகளையும் இலவசமாகவே அனுப்பி வைக்கும்படி கூறிவிட்டாராம் மம்முட்டி. இவற்றின் மொத்த மதிப்பு ரூ 40 லட்சம் ஆகும். இந்த மருந்து மட்டுமல்ல, இனி தேவைப்பட்டாலும் இலவசமாகவே வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளாராம் மம்முட்டி.

மம்முட்டி காலத்தினால் செய்த இந்த உதவி நெகிழ வைத்துள்ளது.

 

Post a Comment