சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 7 ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கலர்ஸ் டிவி நிர்வாகம் அறிவித்துள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ப்ரைம் டைமில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
ஆங்கிலச் சேனலில் வரும் பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவைப் போல கலர்ஸ் டிவியில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தொடங்கப்பட்டது. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளன. நிகழ்ச்சி பற்றி சில சர்ச்சைகள் எழுந்தாலும் ஒரளவு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த நிலையில் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் 6வது சீசன் அக்டோபர் 7 ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் தொகுத்தளிக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ்தான் முதல் வெற்றியாகவும் முதன்மை வெற்றியாகவும் இருந்தது. இன்னொன்று அமிதாப் பச்சனின் குரோர்பதி. தற்போது குரோர்பதி சீசன் 6 தொடங்கியுள்ளது. சில நாட்களிலேயே ஒருவர் கோடீஸ்வரர் ஆகி டிஆர்பியை எகிற வைத்திருக்கிறார். இதற்கு போட்டியாக களமிறங்கும் பிக் பாஸ் சீசன் 6 சில வாரங்களில் தொடங்க உள்ளது. சீசன் 5ல் சல்மான்கானுடன் சஞ்சய் தத்தும் சேர்ந்து தொகுத்தளித்தார். ஆனால் இந்தமுறை சல்மான் தனியாக நிகழ்ச்சியை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment