ஆபாச தளத்தில் போன் நம்பருடன் படங்கள்- நடிகை சுமா அதிர்ச்சி - போலீசில் புகார்!

|

Tamil Actress Photos In Adult Website

தமிழில் நடித்து வரும் சுமா என்ற நடிகையின் படங்கள் ஆபாச இணையதளத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளது.

நடிகை சுமா என்றே ரிஷிகா, பாலிவுட்டிலிருந்து தமிழுக்கு வந்தவர். அர்ஜூன் ஜோடியாக ‘துரை' படத்தில் நடித்தார். 2008-ல் இப்படம் ரிலீசானது.

தற்போது சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘வனயுத்தம்' படத்தில் நடித்து வருகிறார்.

சுமாவின் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவியுள்ளது திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. சுமாவின் ஆபாச படங்களுடன் செல்போன் நம்பரையும் பதிவு செய்து, 'விருப்பம் இருந்தா கூப்பிடுங்க... கொடுக்கும் விலைக்கு ஏற்ற சேவை' என்றெல்லாம் தன் 'சேவை' பற்றி அவரை கூறுவது போல ஆங்கிலத்தில் ப்ரொபைல் உருவாக்கி வைத்துள்ளனர்.

தகவல் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த சுமா, இன்டர்நெட்டில் தன்னை இழிவுபடுத்தி படங்கள் வெளியிட்டுள்ளதாக மும்பை போலீசில் சுமா புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில், "நான் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண். என்னை தப்பானவள்போல் சித்தரித்து இன்டர்நெட்டில் படங்கள் வெளியிட்டு உள்ளனர். அதில் என் போன் நம்பரையும் குறித்துள்ளனர். இதனால் எனக்கு தவறான எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன.

எனது தாய் ஆசிரியை வேலை பார்க்கிறார். தந்தை சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார். நான் மாடலிங் செய்து நடிக்க வந்தேன். என்னை இழிவுபடுத்தி படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment