குஷ்புவின் புதுக் குடும்பம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு ட்விட்டர் அவருடன் இணை பிரியாத ஒன்றாகி விட்டதாம். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ட்விட்டரில் போட்டு வைத்து விடுகிறார்.
காலையில் எழுந்து பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு ரெடி செய்வது முதல் இரவு தூங்கப் போவது வரை என்னென்ன நடக்கிறதோ அத்தனையையும் ட்விட்டரில் சொல்லி விடுகிறார் குஷ்பு.
ஏன் இப்படி என்றால், எனது பிளாக்பெர்ரியிலிருந்து மெசேஜ் செய்வது எளிது, அதனால்தான் என்று கூறிச் சிரிக்கிறார் குஷ்பு. ட்விட்டர் தற்போது குஷ்புவின் விரிவுபடுத்தப்பட்ட ஒரு குடும்பமாகவே மாறிப் போயுள்ளது. ஒரு நாளின் பாதி நேரத்தை ட்விட்டரிலேயே அவர் கழிக்கிறாராம்.
என்னிடம் பலரும் பல கேள்விகளை, சந்தேகங்களை, விளக்கங்களைக் கேட்கிறார்கள். அதற்கு நானும் பொறுமையாக ட்விட்டர் மூலம் பதிலளிக்கிறேன். என்னையும் ட்விட்டரையும் பிரித்துப் பார்க்கவே முடியாது.
மேலும் எனது குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்யங்களையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எனது குடும்பத்தாரிடம் சொல்ல முடியாத - காரணம் இதெல்லாம் போர்ம்மா என்று அலுத்துக் கொள்வார்கள் - விஷயங்களை ட்விட்டர் மூலம் மற்றவர்களுக்கு சொல்கிறேன் என்று கூறி சிரிக்கிறார் குஷ்பு.
விரைவில் பார்த்த ஞாபகம் இல்லையே என்ற கலைஞர் டிவி சீரியல் மூலம் சின்னத் திரை ரசிகர்களை சந்திக்க வருகிறாராம் குஷ்பு. இந்த சீரியலில் அவர் வித்தியாசமான வில்லத்தனம் செய்துள்ளாராம். திரில்லர் சீரியலாக இது அமைந்துள்ளதாம். இது குஷ்புவின் சொந்தத் தொடராம்.
குஷ்புவின் டிவிட்டர் பக்கம்
Post a Comment