தாய்- தந்தைக்கு அடுத்து இளையராஜாவின் இசைதான் மாறாதது என்றார் நடிகர் சூர்யா.
இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசைவெளியீட்டு விழாவில், சிடியை கே பாலச்சந்தர் வெளியிட, சூர்யா பெற்றுக் கொண்டார்.
முன்னதாக, படத்தின் இரண்டாவது பாடலான காற்றைக் கொஞ்சம்.. பாடலை சூர்யா அறிமுகப்படுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், "இளையராஜா பாடல்கள் ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் அழகுபடுத்தி இருக்கும். இளமை காதலி, அழகான விஷயங்கள் எல்லாவற்றிலும் அவர் பாடல்கள் இருக்கும்.
சிறு வயதில் இருந்தே அவர் பாடல்களோடுதான் நான் வளர்ந்தேன். அழகான உலகத்தை பார்க்க வைத்தது.
அப்பா, அம்மா மாதிரி இளையராஜா பாடல்கள் என்றும் மாறாதவை. சிறு வயதில் ரீ-ரிக்கார்டிங் பார்த்துள்ளேன். பாடல்கள் எப்படி உருவாகின்றன என்பதை அறிந்தேன். கேட்க கேட்க சலிப்பே வராத பாடல்களை இளையராஜா கொடுத்துள்ளார்", என்றார்.
+ comments + 1 comments
appadi ya surya
.
nijam than
Post a Comment