சிவகார்த்திகேயனைப் போல இல்லைதான்... இருந்தாலும்.....!

|

Sivakarthikeyan Quits Athu Ithu Ethu Vijay Tv

விஜய் டிவியில் ‘அது இது எது' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு சினிமா வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் இனி அவருக்குப் பதிலாக அந்த நிகழ்ச்சியை சூப்பர் சிங்கர் தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்குகிறார்.

சனிக்கிழமை இரவு 7 மணி ஆகிவிட்டாலே போதும் பெரும்பாலோனோர் விஜய் டிவியின் பக்கம் சேனலை திருப்ப ஆரம்பித்துவிடுவார்கள். "அது இது எது " என்ற நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்களை பங்கேற்க வைத்து அவர்களை கலாய்த்து கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்லும் சிவகார்த்திக்கேயனுக்காகத்தான்.

சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதமே அலாதியானது. டைமிங் ஜோக், சின்னச் சின்ன சுவாரஸ்யங்களோடு கொண்டு செல்வார். மெரினா படத்தின் மூலம் சினிமா வாய்ப்பு வரவே அதனைத் தொடர்ந்து ‘மனம் கொத்திப் பறவைகள்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். சினிமாவில் நடித்த போதும் நிகழ்ச்சி தொப்பாளராகவே தொடர்ந்து வந்தார். தற்பொழுது சினிமா வாய்ப்புகள் அதிகரிக்கவே ‘அது, இது எது' என்ற நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 4 ம் தேதி முதல் அந்த நிகழ்ச்சியை மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்குகிறார். சீரியல்களில் திடீரென்று அவருக்கு பதில் இவர் என்று காட்டுவார்கள். விஜய் டிவி இதிலும் வித்தியாசமாக சிவகார்த்திகேயனே நிகழ்ச்சியில் பங்கேற்று வந்து ஒரு சுற்றையும் நடத்திவிட்டு அனைவருக்கும் பை சொல்லிவிட்டு சென்றார். சினிமாவில் நடிப்பதால் தன்னால் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலையை விளக்கினார் சிவா.

நிகழ்ச்சியில் மூன்று பங்கேற்பாளர்களும், மூன்று சுற்றுகள் உள்ளன. குரூப்ல டூப், சிரிச்சா போச்சி, மாத்தி யோசி. கடைசி சுற்றான மாத்தியோசி சுற்றில் போட்டியை நடத்துபவர் கேக்கும் கேள்விகளுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் பேச வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை தாக்கு பிடிக்க வேண்டும் .சிவா கார்த்திகேயனின் நகைச்சுவை பேச்சால் 1 நிமிடங்கள் கூட யாரும் தாக்கு பிடிக்க மாட்டார்கள் தனது இயல்பான நகைச்சுவை திறனால் சிவகார்த்திகேயன் ஒரு கலக்கு கலக்குவார். ஆனால் மா.கா.பா. ஆனந்திற்கு இன்னமும் அந்த கலை கைவரவில்லை என்றே கூறவேண்டும். சில எபிசோடுகள்தானே முடிந்திருக்கிறது போகப் போக பார்க்கலாம்.

 

Post a Comment